Bøger udgivet af New Horizon Media
-
198,95 kr. - Bog
- 198,95 kr.
-
233,95 kr. - Bog
- 233,95 kr.
-
283,95 kr. ¿¿¿¿¿¿¿: ¿. ¿¿¿¿¿¿¿¿¿ '¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿.' - ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ '¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿.' - ¿¿¿¿ ¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ '¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿.' - ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿ *** ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿ ¿¿¿¿¿¿¿, ¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿ ¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿¿ 5,000 ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿, ¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿, ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿. ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿. 'Indians: A Brief History of A Civilization' ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿.
- Bog
- 283,95 kr.
-
188,95 kr. 'இது தென்னிந்தியா மீது நடைபெற்ற இஸ்லாமியர்களின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கும் ஓர் அரிய புத்தகம். தென்னிந்தியாவில் இன்னும் கோயில்கள் இருப்பதால், அங்கு இஸ்லாமியர்களின் தாக்குதல்கள் நடைபெறவில்லை. அல்லது அவை மிகக் குறைவாகவே நடந்துள்ளன என்று பலர் கருதுகின்றனர். டெல்லி சுல்தானகத்தால் தென்னிந்தியா எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை இந்த அருமையான புத்தகம் கூறுகிறது' என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற வரலாற்று ஆசிரியர் மீனாட்சி ஜெயின். இந்நூலை எழுதிய எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் வரலாறு, தொல்லியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் சாய்வுகளின்றி, தகுந்த ஆதாரங்களோடும் ஏற்கத்தக்க வாதங்களோடும் இஸ்லாமியப் படையெடுப்புகளின் வரலாற்றை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார். சோழப் பேரரசின் வீழ்ச்சியில் தொடங்கி தக்காணத்தில் நடந்த முகமதியர்களின் படையெடுப்புகள், கில்ஜிக்களின் ஆட்சியில் நடைபெற்ற அழிவுகள், துக்ளக்கின் படையெடுப்புகள் என்று விரிந்து செல்கிறது இந்நூல். இந்திய வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும் முக்கிய நூல்களுள் ஒன்று என்று இதனைச் சொல்லமுடியும்.
- Bog
- 188,95 kr.
-
293,95 kr. இன்றைய தலைமுறைக்கான சுவையான சுருக்கப்பட்ட வடிவம். கல்கியின் எளிய, குதிரைப் பாய்ச்சல் நடையில். வரலாறும் கற்பனையும் அற்புதமாக ஒன்றிணையும் பிரமாண்டமான பெருநாவல், கல்கியின் பொன்னியின் செல்வன். தலைமுறைகள் கடந்து பல லட்சக்கணக்கானவர்களால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படும், புதிய வாசகர்களை இன்னமும் கண்டடைந்துகொண்டே இருக்கும் மகத்தான வரலாற்றுப் புதினம் இது. தமிழ் வரலாற்றின் பொற்காலம் என்று புகழப்படும் சோழர்களின் காலத்தை இந்நாவல் போல் நம் கண் முன்னால் கொண்டுவரும் இன்னொரு அற்புதப் படைப்பு இதுவரை தமிழில் எழுதப்படவில்லை. சோழர்களின் வரலாற்றைச் சரித்திர நூல்களிலிருந்து அறிந்துகொண்டதைக் காட்டிலும் பொன்னியின் செல்வனிலிருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்தோடு கற்றிருக்கிறார்கள். தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனின் அழகிய, கையடக்க வடிவம் இந்நூல். ஒரு மகத்தான சாகச உலகம் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. முழுக்க, முழுக்க கல்கியின் எழுத்துகளிலிருந்தே சுருக்கப்பட்டிருப்பதால் மூல நூலின் நடையும் சுவையும் நூறு சதவிகிதம் இதிலும் இடம்பெற்றிருக்கின்றன.
- Bog
- 293,95 kr.
-
180,95 kr. நம் ஆளுமைத் திறன் எப்படிப்பட்டது, நாம் உள்ளுக்குள் என்னவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான புரிதலை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருப்பது அவசியம். நாம் யார் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் நாம் விரும்பும் மாற்றம் நமக்குள் நிகழும். ஒருவருடைய பர்சனாலிட்டியைத் தெரிந்துகொள்ள MBTI, TA, 16 PF, எனியகிராம் உள்ளிட்ட செயல்முறைகளை உலகளவில் வெவ்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கையாள்கிறார்கள். இவை அறிவியல்பூர்வமானவை. நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள பெரிதும் உதவுபவை. இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படிப்படியாகப் பின்பற்றினால் நம் ஒவ்வொருவரின் பர்சனாலிட்டி டைப் என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம். இது தன்னையும் மற்றவர்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. கண்டுபிடித்து முடித்த பிறகு, நாம் என்ன மாதிரியான மாற்றங்களையும் திருத்தங்களையும் நம் குணாதிசயங்களில் கொண்டுவர விரும்புகிறோமோ அவற்றை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். விரிவான வாசிப்பையும் நீண்ட ஆய்வையும் இணைத்து இந்த விலை மதிப்பற்ற உளவியல் கையேட்டை உருவாக்கியிருக்கிறார் சோம. வள்ளியப்பன். இது ஒரு புது வரவு மட்டுமல்ல, புரட்சிகரமான வரவும்கூட.
- Bog
- 180,95 kr.
-
179,95 kr. துரியோதனன் பார்வையில் மகாபாரதம். இதிகாசங்களும் புராணங்களும் காற்று, கடல், ஆகாயம் போல் அனைவருக்குமானவை. அவற்றுக்கு எல்லைகள் வகுக்க இயலாது. எந்தக் கோணத்திலிருந்தும் அணுகலாம். எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு விதங்களில் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். மகாபாரதத்தை யாருடைய பார்வையிலிருந்தும் விரித்தெடுக்கலாம். நன்மை தீமை, தர்மம் அதர்மம், நாயகன் வில்லன் ஆகிய இருமைகளைக் கொண்டு மகாபாரதத்தை அணுகுவது ஒரு முறை என்றால் இந்த மதிப்பீடுகளிலிருந்து விலகி, எதிர் நிலையிலிருந்து அதன் கதையைச் சொல்லத் தொடங்குவது இன்னொரு முறை. இந்நாவலில் மகாபாரதம் துரியோதனின் கோணத்திலிருந்து விரிகிறது. கறுப்பும் வெள்ளையும் கலந்து வியாசர் உருவாக்கிய துரியோதனனை இருள் மனிதனாக மட்டும் சுருக்கிக் காணவேண்டியதில்லை என்று வாதிடும் இந்நாவல் ஒரு புதிய தேடலைத் தொடங்கி வைப்பதோடு நமக்கு நன்கு பரிச்சயமான கோணங்களையும் நிகழ்வுகளையும் புதிய நோக்கில் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது. முற்றிலும் புதிய, வண்ணமயமான ஒரு மகாபாரதத்தை வாசிக்கத் தயாராகுங்கள்.
- Bog
- 179,95 kr.
-
328,95 kr. தமிழில் B.R.மகாதேவன் பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்து தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தி, சாவர்க்கர், ஜின்னா ஆகியோரின் கோணம், பிரிவினை தொடர்பான உலக நாடுகளின் வரலாறு என அனைத்துக் கோணங்களும் விவாதிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு ஆழமாகவும் எந்த அளவுக்கு நடுநிலையோடும் அண்ணல் இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளமுடியும். விரிவான ஆய்வுக்குப் பிறகு, பிரிவினைதான் ஒரே தீர்வு எனும் முடிவுக்குதான் அம்பேத்கரும் வந்து சேர்கிறார். அந்தப் பிரிவினையை எவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது குறித்து அவர் முன்வைக்கும் பார்வை தனித்துவமானது. ஆனால் அவர் பார்வையை ஒருவரும் கணக்கில் கொள்ளவில்லை. அதன்பின் நடந்தவை நமக்குத் தெரியும். 1940களில் வெளிவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்பேத்கரின் இந்நூலை இன்றைய அரசியல் சூழலில் நாம் வாசிப்பதும் விவாதிப்பதும் முக்கியம்.
- Bog
- 328,95 kr.
-
170,95 kr. இந்திய அரசியல் வரலாற்றில் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் விரிவானவை. இயன்றவரை ஒதுங்கியிருந்தவரை இந்திராவின் படுகொலை அரசியலுக்கு இழுத்து வந்தது. அதே அரசியல் அவர் வாழ்வையும் கனவையும் ஒருசேர முடிவுக்குக் கொண்டுவந்தது. நேரு போலவோ இந்திரா போலவோ நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர் கிடையாதுதான். இருந்தாலும், எமர்ஜென்சி முதல் எம்.ஜி.ஆர் வரை; அசாம் முதல் ஆசிய விளையாட்டு வரை; போபால் முதல் பஞ்சாப் விவகாரம் வரை; அயோத்தி முதல் அமிதாப் பச்சன் வரை; பிரணாப் முகர்ஜி முதல் போஃபர்ஸ் வரை; சார்க் முதல் ஷாபானு வரை; வி.பி.சிங் முதல் விடுதலைப்புலிகள் வரை; கம்ப்யூட்டர் முதல் கட்சித்தாவல் தடைச்சட்டம் வரை; ஜெயவர்த்தனே முதல் ஜெயலலிதா வரை அவர் அரசியல் வாழ்வின் அத்தியாயங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் படர்ந்தும், விரிந்தும் உள்ளன. இந்தியாவை அவர் முன்னால் நகர்த்திச் öன்றிருக்கிறார்; பின்னுக்கும் இழுத்து வந்திருக்கிறார். அவருடைய வெற்றிகளில் இருந்து மட்டுமின்றி தோல்விகளிலிருந்தும் தடுமாற்றங்களில் இருந்தும் பெற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. ராஜீவ் காந்தியின் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்நூல் அன்றைய இந்தியாவின் நிழல் எவ்வளவு அழுத்தமாக இன்றைய இந்தியாவின்மீது படிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. 'திராவிட இயக்க வரலாறு', 'தமிழக அரசியல் வரலாறு' உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நூல்களை எழுதிய ஆர். முத்துக்குமாரின் விரிவான, விறுவிறுப்பான படைப்பு.
- Bog
- 170,95 kr.
-
198,95 kr. வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். தவறு. நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்? உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது? அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது? அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது? சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது? அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா? எனில் யாரிடமிருந்து? அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா? அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா? ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்? இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன். நம் தேசத்தின் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்துக்கொள்வது நம் உரிமை. ஒரு குடிமகனாக அது நம் கடமையும்கூட.
- Bog
- 198,95 kr.
-
263,95 kr. அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். 'நவசக்தி' பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் 'ஆனந்த விகடன்' பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக அவரே 'கல்கி' வார இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் இருந்தார்.தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடி. இவரது 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்', 'பார்த்திபன் கனவு' போன்ற சரித்திரக் கதைகள் அக்காலத்தில் வாசகர்களின் மனத்தில் இதிகாசம் போலவே இடம் பெற்றன. இன்றளவும் வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் 'பொன்னியின் செல்வன்' 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிரசித்தி பெற்ற இந்த வரலாற்றுப் புதினம் கி.பி. 1000ம் ஆண்டு காலக் கட்டத்தில் அரசோச்சிய சோழப் பேரரசை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது.1954, டிசம்பர் 5ம் தேதி, தமது 55வது வயதில் கல்கி காலமானார்.கல்கியின் எழுத்துகள் 1999ம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
- Bog
- 263,95 kr.
-
243,95 kr. அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். 'நவசக்தி' பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் 'ஆனந்த விகடன்' பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக அவரே 'கல்கி' வார இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் இருந்தார்.தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடி. இவரது 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்', 'பார்த்திபன் கனவு' போன்ற சரித்திரக் கதைகள் அக்காலத்தில் வாசகர்களின் மனத்தில் இதிகாசம் போலவே இடம் பெற்றன. இன்றளவும் வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் 'பொன்னியின் செல்வன்' 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிரசித்தி பெற்ற இந்த வரலாற்றுப் புதினம் கி.பி. 1000ம் ஆண்டு காலக் கட்டத்தில் அரசோச்சிய சோழப் பேரரசை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது.1954, டிசம்பர் 5ம் தேதி, தமது 55வது வயதில் கல்கி காலமானார்.கல்கியின் எழுத்துகள் 1999ம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
- Bog
- 243,95 kr.
-
198,95 kr. திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயாரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில் சிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகளுக்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்கவேண்டியிருந்தது.திமுகவின் முடிவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கிணைத்தார். தமிழகம் அதுவரை அறிந்திராத, வலிமையான எதிர்க்கட்சி இலக்கணத்தை வகுத்து கட்சிக்கு உயிரூட்டினார்.ஜெயலலிதா, வைகோ என்று புதிய தலைவர்கள் அறிமுகமான-போது, திராவிட இயக்கம் விரிந்தும், பிரிந்தும் வளர ஆரம்பித்தது. என்றாலும், திமுக, அதிமுக தவிர்த்து இன்னொரு கட்சியால் இங்கே ஆட்சி செய்ய முடியவில்லை. கட்சிப் பிரிவினைகள் தாண்டி ஒரு வலுவான சக்தியாக, திராவிட இயக்கம் வளர்ந்து பரவியிருப்பதையே இது காட்டுகிறது. அண்ணா மறைந்த 1969 தொடங்கி நேற்று வரையிலான இயக்க வரலாறு இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது.
- Bog
- 198,95 kr.
-
338,95 kr. Complete collection of short stories of a Tamil author.
- Bog
- 338,95 kr.
-
208,95 kr. 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, பிரிட்டனிடம் பெற்ற சுதந்தரத்தை இந்தியா, இந்திரா காந்தியிடம் இழந்தது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. மனித உரிமைகள் சட்டப்படி மீறப்பட்டன. இந்தியாவின் வரலாற்றில் இருண்ட பாகமாக இன்று வரை நீடிக்கிறது அந்தக் காலகட்டம். இந்தியாவின் முதன்மை எதிரியாக அடையாளம் காணப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண், மிஸா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சண்டிகரில் சிறைவைக்கப்பட்டார். சிறையில் ஜேபி கழித்த அந்த ஆறு மாதங்களில், இந்தியா முற்றிலுமாக மாறிப்போனது. ஜேபியும் மாறித்தான் போனார். இரண்டாவது மகாத்மாவாக. இந்தியாவுக்கு இன்னொரு சுதந்தரப் போர் தேவை என்பதை உணர்ந்த ஜேபி, ஃபாசிஸத்துக்கு எதிரான மாபெரும் ஜனநாயகப் போரை பிரகடனம் செய்தார். ஜேபிக்கும் இந்திரா காந்திக்குமான போர். நீதிக்கும் அநீதிக்குமான போர். எதேச்சாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான போர். அடிமைத்தனத்துக்கும் சுதந்தர வேட்கைக்குமான போர். இந்தப் புத்தகம் நெருக்கடி நிலையையும் ஜேபியின் போராட்டத்தையும் கண்முன் நிறுத்துகிறது. நூலாசிரியர் எம்.ஜி. தேவசகாயம், மாவட்ட ஆட்சியராகவும், மேஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றியவர். ஜேபி சிறைவைக்கப்பட்டபோது அவரைக் கண்காணிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. ஜேபியோடு நெருங்கிப் பழகிய அந்தத் தருணங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாதவை என்கிறார் தேவசகாயம்.
- Bog
- 208,95 kr.
-
178,95 kr. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் பிச்சைப்பாத்திரம் - 26.12.2008
- Bog
- 178,95 kr.
-
208,95 kr. - Bog
- 208,95 kr.
-
- Bog
- 293,95 kr.
-
178,95 kr. - Bog
- 178,95 kr.
-
- Bog
- 198,95 kr.
-
198,95 kr. - Bog
- 198,95 kr.
-
178,95 kr. - Bog
- 178,95 kr.
-
- Bog
- 178,95 kr.
-
188,95 kr. - Bog
- 188,95 kr.
-
178,95 kr. - Bog
- 178,95 kr.
-
188,95 kr. - Bog
- 188,95 kr.
-
283,95 kr. - Bog
- 283,95 kr.
-
- Bog
- 318,95 kr.
-
- Bog
- 188,95 kr.
-
233,95 kr. - Bog
- 233,95 kr.