Bøger af Madhavan
-
137,95 kr. அய்யப்பமாதவன் கதைகள் கிராமக் கூட்டுக்குடும்ப வாழ்வினின்றும் பயணமாகி பெரு நகரத்தில் தனிக்குடும்பமாய் ஸ்டோர் வீடுகள் எனும் எதிரெதிர் வாசல் கதவுகளினுள்ளே வாழும் பல தரப்பட்ட மனிதர்களீனூடாக உழல்பவை. அங்கிருந்து வெளியேறி தத்தம் இருத்தலை நகர நெரிசலுக்குள் புழங்கி மீண்டு தங்களின் வாடகைக் குடியிருப்புகளுக்கான தனித்துவத்தையும் பேணிக்கொள்பவை. அய்யப்பன் இப்பற்றின்மை மீதான தனது உற்று நோக்கலைக்கொண்டு காட்சியும் கதையுமாக அங்கே கவிந்திருக்கும் அன்பின் வலைப்பின்னலை நமக்கு உளவியலாகவும் கவித்துவமாகவும் தந்துவிடுகிறார். தானாக நிறையும் கிணற்றடி கதைகளில் துலங்கிய பெண் மனோபாவங்கள் தொட்டு இயற்கையும் பெண்ணுமாகிய உறவு நிலைகளில் இவ்வுலகை அனாயாசமாக துல்லிதமாக விவரிக்கும் இவ்வகை யதார்த்தம் நவீன பாடுபொருட்களில் நமது இடத்தையும் காலத்தையும் அளவிட்டுச் சொல்ல முயல்கின்றன. -யவனிகா ஶ்ரீராம்
- Bog
- 137,95 kr.