Bøger af &&& Anand Amaladass Sj
-
158,95 kr. ஔவையாரின் ஆத்திசூடி தமிழ் கற்க விரும்பும் குழந்தைகளுக்கான பாடல் நூல் மட்டுமல்ல. தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாகரிகத்தை, தமிழர் வாழ்வை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு வளமான புதையலும்கூட. ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள 109 பொன்மொழிகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் ஆகிய மரபுகளில் இடம்பெற்றுள்ள பொருத்தமான பார்வைகளைத் திரட்டி ஒவ்வொரு பொன்மொழிக்கும் ஒளி சேர்க்கிறது இந்நூல். கூடவே சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், முக்கிய தமிழ் ஆளுமைகள் ஆகியோரின் சொற்களும் பொருத்தமாக இடம்பெற்றிருக்கின்றன. தமிழர் மாண்பை எடுத்துக்காட்டும் பொருத்தமான படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு தமிழரும் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிப் பரிசளிக்கவேண்டிய அற்புதமான தொகுப்பு.
- Bog
- 158,95 kr.
-
233,95 kr. வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 275 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஆய்வாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல். இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதே இந்நூலின் குறிக்கோள். முதன் முறையாக இந்நூல் இங்கு ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளி வருகிறது. விரிவான அடிக்குறிப்புகளுடன் வரலாற்றுத் தரவுகளையும் அளிக்கிறது. *** முனைவர் ஆனந்த் அமலதாஸ் சே.ச, மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். அபிராமி அந்தாதி, கந்தர் அநுபூதி, சித்தர் பாடல் தொகுப்பு போன்ற நூல்களை செர்மனில் மொழிபெயர்த்தவர்.வீரமாமுனிவரின் அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலூர் கலம்பகம், அடைக்கல மாலை பாடல்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அழகியல், பன்முகப் பண்பாட்டு உரையாடல் போன்ற துறைகளில் ஆய்வு செய்து வருகிறார்.
- Bog
- 233,95 kr.